search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை முன்னெச்சரிக்கை"

    • மின்விபத்துகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
    • மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கோவை,

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மின்வாரியம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

    இதுதொடர்பாக கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட கு.வடமதுரை, சீரக்கநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக புயல், வெள்ளத்தால் ஏற்படும் மின்விபத்துகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

    இடி- மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்றவைகளில் தஞ்சம் அடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, நிழற்குடையிலோ தஞ்சம் அடையக் கூடாது. திறந்தவெளியில் உள்ள ஜன்னல்கள், கதவு ஆகியவற்றின் அருகே நிற்க கூடாது.

    இடி-மின்னலின் போது தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகே நிற்க கூடாது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனடியாக பிரிவு பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தாங்களாகவே பழுதை சரி செய்ய முயற்சி செய்யக்கூடாது.

    மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது. தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும், மிதிக்காமலும் இருப்பதுடன் மின்வாரிய அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    ஈரமான கைகளால் ஸ்விட்சுகளை தொடக்கூடாது. ஸ்டே கம்பிகள் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கயிறு கட்டி துணி காய வைத்தல் மற்றும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கம்பங்களில் கட்டுதல் போன்ற செயல்களை தவிர்த்தல் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது.
    • வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்ஷஜீ வனா தலைமையில் நடை பெற்றது

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

    வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

    பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமான தாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நீர்நிலைப் புறம்போக்கு களான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நட வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

    அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள த்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிட ங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    நீர்நிலைகளில் பொது மக்கள், சிறுவர் - சிறுமிகள் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெ ச்சரிக்கை அறிவிப்பு பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    ×